COPY RIGHT-க்காக ரூ. 20 கோடி கேட்ட தனுஷ்? உண்மையை உடைத்து பேசிய வெற்றிமாறன்

Dhanush Silambarasan Vetrimaaran
By Kathick Jul 01, 2025 02:25 AM GMT
Report

வெற்றிமாறன் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் எஸ்டிஆர் 49. விடுதலை 2 படத்தை தொடர்ந்து வாடிவாசல் படத்தை வெற்றிமாறன் இயக்கப்போகிறார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில காரணங்களால் வாடிவாசல் படம் தள்ளிப்போயுள்ளது.

முதல் முறையாக சிம்பு - வெற்றிமாறன் கூட்டணியில் இப்படம் உருவாகி வரும் நிலையில், சமீபத்தில்தான் இப்படத்திற்கான அறிவிப்பு வீடியோ படப்பிடிக்கப்பட்டது. அந்த புகைப்படம் கூட இணையத்தில் வைரலானது. எஸ்டிஆர் 49 திரைப்படம் வடசென்னை 2 என இணையத்தில் பேசப்பட்டு வந்த நிலையில், வடசென்னை பட தயாரிப்பாளர் தனுஷ் COPY RIGHT-ஆக ரூ. 20 கோடி கேட்டதாக தகவல் வெளிவந்தன.

இப்படியிருக்க தனுஷ் ரூ. 20 கோடி கேட்டாரா இல்லையா என்ற சர்ச்சை குறித்து வெற்றிமாறன் விளக்கம் அளித்துள்ளார்.

COPY RIGHT-க்காக ரூ. 20 கோடி கேட்ட தனுஷ்? உண்மையை உடைத்து பேசிய வெற்றிமாறன் | Vetrimaaran Talk About 20 Crore Copy Right Issue

"தனுஷ்தான் வடசென்னை படத்தின் தயாரிப்பாளர். அப்படத்தின் சம்பந்தப்பட்ட விஷயங்கள் எதுவாக இருந்தாலும், அதற்காக அவரிடம் நாம் உரிமை கேட்கவேண்டும். ஆனால், COPY RIGHT குறித்து தனுஷிடம் பேசும் போது, 'சார் உங்களுக்கு எது சரியாக இருக்குமோ அதை பண்ணுங்க. நாங்க எங்க சைடுல இருந்து NOC கொடுத்துடறோம், பணம் எல்லாம் ஒன்றும் வேண்டாம்' என்று சொல்லிட்டார். ஆனால், இது குறித்த வதந்திகளை எல்லாம் பார்க்கும் போது ரொம்ப கஷ்டமாக இருக்கு" என கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர் "எஸ்டிஆர் 49 வடசென்னை 2 கிடையாது. தனுஷ் நடிப்பதுதான் வடசென்னை 2 அன்புவின் எழுச்சியாக இருக்கும். இந்த படம் வடசென்னை உலகத்தில் நடக்கும் ஒரு கதை. அதாவது அதில் இருக்கும் கதாபாத்திரங்கள், சில விஷயங்கள் எல்லாம் இப்படத்தில் இருக்கும்" என தெரிவித்துள்ளார் வெற்றிமாறன்.