ரஜினிக்காக அந்த விஷயத்தில் அப்படி செய்த 29 வயது நடிகை.. அதுக்குன்னு இப்படி பண்ணக்கூடாது மேடம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ரஜினிகாந்த் கடைசியாக அண்ணாத்த படம் வெளிவந்தது. இப்படத்தில் ரஜினிக்கு தங்கையாக பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். இந்நிலையில், ரஜினியுடன் இப்படத்தில் நடிப்பதற்காக 29 வயது நடிகை கீர்த்தி சுரேஷ், சில விஷயங்களை ஒதுக்கியுள்ளார்.
ஆம், ரஜினியுடன் இணைந்து நடிக்க பிரம்மாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கமாட்டேன் என்று மறுத்துள்ளாராம். மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது நடிகை கீர்த்தி சுரேஷ் தானாம். ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடிப்பதற்காகவே, இப்படத்தில் நடிக்க மாட்டேன் என்று மேடம் கீர்த்தி கூறியுள்ளார்.