அஜித் நடித்த இந்த படத்தின் ரீமேக்கில் கீர்த்தி சுரேஷ்! 65 வயது நடிகருடன் இந்த கதாபாத்திரமா?

chiranjeevi shrutihaasan vedalam keerthy_suresh
By Edward Aug 04, 2021 12:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக குறுகிய காலகட்டத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். நடிகர் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தில் அவருக்கு மகளாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் தமிழில் நடிகர் அஜித் நடித்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற வேதாளம் படத்தின் ரீமேக்கில் நடிக்கவிருக்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. அஜித் கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியும் அவரின் தங்கையாக நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். தற்போது அண்ணாத்த, மகேஷ் பாபுவின் சர்கார் படத்தின் ரீமேக் சர்காரு வாரி பாட்டா படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.