குறைய துவங்கிய பட வாய்ப்பு.. கடைசியில் இந்த நிலைமைக்கு வந்த கீர்த்தி சுரேஷ்

actress keerthy suresh advertisement movie chance
By Kathick Apr 15, 2022 02:40 PM GMT
Report

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் தற்போது சாணி காயிதம் எனும் திரைப்படம் தமிழில் உருவாகியுள்ளது. இதை தவிர்த்த மாமனிதன் எனும் புதிய படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

மேலும், தெலுங்கில் மகேஷ் பாபு படத்திலும், மலையாளத்தில் டோவினோ தாமஸ் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இதுதவிர கீர்த்தியின் கைவசம் வேறு எந்த படங்களும் இல்லை. மேலும், இதில் மூன்று படங்களின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், தற்போது மாமனிதன் படத்தின் படப்பிடிப்பு மட்டுமே நடந்து வருகிறது.

இந்நிலையில், பட வாய்ப்புகள் குறைய துவங்கியுள்ள நிலையில், மருந்து டெலிவரி செய்யும் விளம்பரத்தில் நடிக்க வந்துள்ளார் கீர்த்தி. முன்னணி நடிகையாக ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இவருக்கு இப்படியொரு நிலையா என்று திரைவட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.