தொடர் தோல்வியால் ராசியில்லாமல் போன நடிகை! விரக்தியில் எடுத்த திடீர் முடிவு

Gossip Today Indian Actress
By Jai Jun 11, 2022 06:20 PM GMT
Report

மலையாள வாரிசாக தமிழ் சினிமாவில் வாரிசு நடிகருடன் ஜோடிப்போட்டு நடித்தவர் தான் அந்த நடிகை. இப்படம் நல்ல வரவேற்பு பெறாமல் போனாலும் தொகுப்பாளர் நடிகருடன் சேர்ந்து முருகன் பேர் கொண்ட படத்தில் நடித்து பெரிய வரவேற்பு பெற்றார்.

அதன்பின் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என நடித்து தேசிய விருதையும் பெற்றார். யார் கண்பட்டதோ தெரியவில்லை அப்படத்திற்கு பிறகு முன்னணி நடிகர்களுடன் நடித்த எந்த படமும் ஓடாமல் தோல்வியை தழுவியது.

இதனால் ராசியில்லாத நடிகையாக மாறி சோகத்தின் விளிம்பிற்கு தள்ளப்பட்டார். சினிமாவே உயிர்மூச்சாக கருதி நடித்து வந்த அம்மணி சமீபத்தில் கூட தெலுங்கு சூப்பர் ஸ்டாருடன் ஜோடிப்போட்டு நடித்தார்.

அந்த படம் அக்கடதேசத்தில் வரவேற்பு பெற்றாலும் நடிகையின் ரோல் பேசும்படியாக இல்லை. இதனால் விரக்தியில் இருந்த அம்மணி திருமணத்திற்கும் தயாராகிவிட்டாராம். ஆனால் அம்மணி திடீரென ஒரு முடிவெடுத்து ஷாக் கொடுத்துள்ளாராம்.

தனக்கு ஆறுதலாக ஒரு விசயத்தை செய்ய வேண்டும் என்று பெரிய பண்ணைகளை அமைத்து இயற்கை விவசாயத்தை செய்ய திட்டமிட்டுள்ளாராம்.