என்னது எனக்கு கல்யாணமா!! கடுப்பாகிய நடிகை கீர்த்தி சுரேஷ்..
இது என்ன மாயம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி அடுத்தடுத்த தமிழ் படங்களில் கமிட்டாகி நடித்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷின் பல படங்கள் தோல்வியை சந்தித்து வருகிறது.
வரிசையில் அடுக்கடுக்கான படங்களை லைன் அப்பில் வைத்திருக்கும் கீர்த்தி சுரேஷ், மாமன்னன் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், பகத் பாசில் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் உருவான இப்படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார்.
மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன் 1 ஆம் தேதி நடந்துள்ளது. பிரம்மாண்ட முறையில் நடந்த நிகழ்ச்சிக்கு கீர்த்தி சுரேஷ் மும்பையில் நடந்த ஷூட்டிங்கை முடித்துவிட்டு வந்துள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்து பேசிய கீர்த்தி சுரேஷின் திருமணம் எப்போது, திருமணம் பற்றி செய்திகள் வெளியானது பற்றி கேள்வியை கேட்டுள்ளார்.
அதற்கு கீர்த்தி சுரேஷ், நான் எதுவும் அறிவிக்கவில்லை, அதற்கு முற்றுப்புள்ளியும் வைத்துவிட்டேன், ஏங்க என்னை கல்யாணம் பண்ணி கொடுக்குறதிலேயே இருக்கீங்க, நடக்கும் போது நானே சொல்வேன் என்று கூறிவிட்டு வெளியேறிவிட்டார் கீர்த்தி சுரேஷ்.