படத்திற்காக இப்படி ஒல்லியாக மாறிய நடிகை கீர்த்தி சுரேஷ்! லீக்கான பள்ளிபருவ புகைப்படம்..
தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இதையடுத்து தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகர்களுடன் நடித்து கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகை என்ற இடத்தினை பிடித்தார். சமீபத்தில் இவர் நடித்து வெளியான மகாநதி படம் தேசிய விருது பெற்று புகழப்பட்டார்.
தற்போது உடல் எடையை குறைத்து படுஒல்லியாக மாறி இருந்தார். அதற்கு காரணம் நடிகர் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்திற்காக என்று கூறினார்கள். அண்ணாத்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் சூப்பர் ஸ்டாருக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் பள்ளிப்பருவத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது. ஆனால் இப்புகைப்படம் தெலுங்கு படமொன்றில் நடித்த புகைப்படம் என்று கூறி வருகிறார்கள் சில ரசிகர்கள்.
.@KeerthyOfficial as @rajinikanth 's Sister in #Annaatthe. She Reduced Her Weight for this School Girl Character.✌️ pic.twitter.com/lLhh79LeBD
— Karthik Ravivarma (@Karthikravivam) September 21, 2021