சூப்பர் ஸ்டார் பிறந்தநாளில் கீர்த்தி சுரேஷுக்கு கல்யாணம்!! வெளியான திருமண பத்திரிக்கை...
கீர்த்தி சுரேஷ்
தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் சினிமாவில் கால் பதித்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். சமீபத்தில் தெறி படத்தின் இந்தி ரீமேக்கில் வருண் தவானுடன் பேபி ஜான் படத்தில் நடித்துள்ளார் கீர்த்தி. படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது.
கீர்த்தி சுரேஷ் பாலிவுட் சினிமாவில் நடித்துள்ள பேபி ஜான் படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி, மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
நடிகை கீர்த்தி சுரேஷ் பல ஆண்டுகளாக காதலித்து வந்த ஆண் நண்பரை தான் திருமணம் செய்யவுள்ளார் என்றும் 15 ஆண்டுகளாக அந்தோனி தட்டில் என்ற ஆண் நண்பவரை கீர்த்தி சுரேஷ் காதலித்து வருவதாகவும் டிசம்பர் மாதம் திருமணம் என்று கூறப்பட்டது.
திருமண பத்திரிக்கை
இதனை தொடர்ந்து கீர்த்தி சுரேஷுக்கும் - அந்தோனி தட்டிலும் வரும் டிசம்பர் 12 ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. திருமணம் கோவாவில் நடைபெறவுள்ளதாகவும் கீர்த்தி சுரேஷ் தெரிவித்திருந்தார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பிறந்தநாளுக்கு கீர்த்தி சுரேஷின் திருமணம் நடைபெறவுள்ளதை பலரும் பாராட்டி வருகிறார்கள். கீர்த்தி சுரேஷ் - அந்தோனி தட்டிலின் திருமண பத்திரிக்கை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.