30வது பிறந்த நால் அதுவுமா இப்படியா? கீர்த்தி சுரேஷ்-க்கு ஏற்பட்ட ராசியில்லா பட்டம்..

Keerthy Suresh Gossip Today
By Edward Oct 17, 2022 08:54 AM GMT
Report

இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை கீர்த்தி சுரேஷ். நடிகர் சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து பிரபலமான கீர்த்தி சுரேஷ், தமிழ், தெலுங்கு சினிமாவின் இருக்கும் முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடிக்க ஆர்ம்பித்தார்.

2015ல் ஆரம்பித்த சினிமா வாழ்க்கையில் வெறும் 7 வருடத்தில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாகவும் கோடியில் சம்பளம் வாங்கும் நடிகையாகவும் திகழ்ந்து வருகிறார். ஆனால், சாணிக்காயிதம், மகாநதி போன்ற படங்களை தவிர்த்து கீர்த்தி சுரேஷ் நடித்த பல படங்கள் தோல்வியை பெற்று வந்தது.

சர்கார், பைரவா, சாமி 2, சண்டைக்கோழி, பாம்புசண்டை, தானா சேர்ந்த கூட்டம், அண்ணாத்தே உள்ளிட்ட பல படங்கள் தமிழில் படுதோல்வியை அடைந்தது. இதனால் கீர்த்தி சுரேஷ் ராசி இல்லாத நடிகை என்ற பெயரையும் பெற்று வந்தார்.

சமீத்தில் கூட சர்க்கார் வாரிப்பாட்டா படம் படுதோல்வியடைந்து விமர்சனத்திற்குள்ளாகினார். இந்நிலையில் இன்று கீர்த்தி சுரேஷ் தன்னுடைய 30வது பிறந்த நாளை ஆரம்பித்துள்ளார். எப்போதும் இன்ஸ்டாகிராம், டிவிட்டர் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், பிறந்த நாள் அதுவும் ஒரு பதிவு கூட போடாம் அமைதியாகி வருகிறார்.

இதற்கு பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில் இனியாவது நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்யுங்கள் என்று அறிவுரை கூறியும் வருகிறார்கள்.