நடிகைகளிடம் அத்துமீறி சீண்டிய 68 வயது நடிகர்!! கீர்த்து சுரேஷ் செய்த செயல்.. வைரல் வீடியோ..
தமிழ் சினிமாவில் தற்போது பெரியளவில் பேசப்பட்டு வருவது மன்சூர் அலிகான், திரிஷாவை பற்றி படுமோசமாக விமர்சித்து பேசியது தான்.
இதுகுறித்து நடிகை திரிஷா கண்டித்து பதிவு ஒன்றினை பகிர்ந்ததில் பல நட்சத்திரங்கள் அவருக்கு ஆதரவாகவும் மன்சூர் அலிகானை கண்டித்தும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் இது தொடர்பாக பேசிய மன்சூர் அலி கான், நான் பேசியதை தவறாக கட் செய்து போட்டு இருக்கிறார்கள். நான் நல்ல விதமாக தான் பேசினேன். நடிகர் சங்கம் இப்போது மிகப்பெரிய தவறு செய்துவிட்டது.
இந்த மாதிரியான வீடியோ வந்தால் இதை பற்றி என்னிடம் கேள்வி கேட்டு இருக்கலாம். ஆனால் ஒரு கேள்வியும் கேட்கவில்லை. போன் செய்யவில்லை என்று நடிகர் சங்கத்தினரை கண்டித்து பேசியிருந்தார்.
இதுபக்கம் இருக்க, திரிஷாவுக்கு ஆதரவாக தெலுங்கு சினிமாவின் மெகா சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவியும் ஆதரவாக பேசி கருத்தினை பகிர்ந்தார்.
இதனை நெட்டிசன்கள் பலர் நடிகர் சிரஞ்சீவி நடிகைகளுடன் அத்துமீறியபடி சீண்டியுள்ள வீடியோக்களை பகிர்ந்து விமர்சித்து வருகிறார்கள்.
#Chiru Gaaru's Compilation ??#Chiranjeevipic.twitter.com/QQBntyBQ4F
— VCD (@VCDtweets) November 21, 2023