கீர்த்தி சுரேஷின் கழுத்தை நெரித்த சூப்பர் ஸ்டார்!! விழுந்து சிரித்த நடிகை தமன்னாவின் வீடியோ..
தமிழில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித்குமார், ஸ்ருதி ஹாசன், லட்சுமி மேனன் நடித்து வெளியான படம் வேதாளம்.
இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் மெகா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி போலா சங்கர் என பெயரிடப்பட்ட டைட்டிலில் நடித்துள்ளார்.
இப்படத்தில் லட்சுமி மேனன் கதாபாத்தில் நடிகை கீர்த்தி சுரேஷும், ஸ்ருதி ஹாசன் ரோலில் தமன்னாவும் நடித்துள்ளனர்.
இப்படம் வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் மெகா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, கீர்த்தி சுரேஷ், தமன்னாவும் கலந்து கொண்டுள்ளனர்.
நிகழ்ச்சியில் சிரித்தபடி பேசிக்கொண்டிந்த போது சிரஞ்சீவி, கீர்த்தி சுரேஷை பார்த்து நாக்கை கடித்தபடி அவரின் கழுத்தை நெரித்துள்ளார்.
காமெடியாக நடந்த இச்சம்பவத்தை அருகில் இருந்து பார்த்த தமன்னா விழுந்து சிரித்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Madly needed to know about the context here ??@KChiruTweets - @KeerthyOfficial - @tamannaahspeaks - #BholaaShankarpic.twitter.com/y8JBjKFphp
— KARTHIK DP (@dp_karthik) June 8, 2023