நம்பர் 1-க்கு போட்டிப்போடும் நயன் - சமந்தா!!அந்த விசயத்தில் கீர்த்தி சுரேஷை ஓரங்கட்டிய நடிகை திரிஷா..

Keerthy Suresh Nayanthara Samantha Trisha Tamil Actress
By Edward Jun 14, 2023 07:32 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் நடித்து வரும் பல நடிகைகள் எப்படியாவது டாப் இடத்திற்கு சென்று தங்களுடைய திறமையை காட்டி உச்சத்தை அடைய போராடுவார்கள். அப்படியான லேடி சூப்பர் ஸ்டார் என்ற டைட்டிலை பெற்று வருகிறார் நயன் தாரா.

அவருக்கு அடுத்த இடத்தினை பிடிக்க தற்போது இருக்கும் டாப் நடிகைகள் போட்டிப்போட்டு பல படங்களில் நடித்து வருகிறார்கள்.

அந்தவகையில் நயன் தாரா, சமந்தா இருவருக்கும் இடையில் நம்பர் 1 இடத்திற்கு போட்டி இருந்து வருவதாக பிரபல ஆர்மேக்ஸ் ஊடகம் பட்டியலை வெளியிட்டுள்ளது.

கடந்த மே மாதம் பாப்புலரான நடிகைகள் யார் யார் என்ற லிஸ்ட்-ஐ வெளியிட்டுள்ளது. அதில் நயன் தாரா, சமந்தா முதல் மற்றும் இரண்டாம் இடத்திலும், அவருக்கு அடுத்த இடத்தில் நடிகை திரிஷா பிடித்துள்ளார். கீர்த்தி சுரேஷ் 4, தமன்னா 5, ஜோதிகா 6 வது இடத்திலும் பிடித்துள்ளனர்.

அவர்களுக்கு அடுத்த படியான ஐஸ்வர்யா ராஜேஷ், காஜல் அகர்வால், சாய் பல்லவி, பிரியங்கா மோகன் போன்ற நடிகைகள் பிடித்துள்ளனர்.

நேஷ்னல் கிரஷ்-ஆக தமிழிலும் அறிமுகமாகி பிரபலமான ராஷ்மிகா மந்தனா டாப் 10 இடங்களை பிடிக்காமல் இருப்பது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

Gallery