கடைசில கீர்த்தி சுரேஷையே ஐட்டம் சாங்ல ஆட வெச்சுட்டீங்களா? அதுவும் இப்படியொரு நெருக்கமான போஸ்..
தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் படத்தின் மூலம் கடந்த 2015ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன் படத்தில் ஜோடிபோட்டு நடித்து பிரபலமானார்.
இப்படத்திற்கு பிறகு முன்னணி நடிகர்கள் விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், நானி, மகேஷ் பாபு உள்ளிட்ட நட்சத்திரங்களுடன் நடித்து கொடிக்கட்டி பறந்தார். மேலும் மகாநதி படத்திற்காக தேசிய விருது வாங்கிய நடிகை லிஸ்ட்டில் இணைந்தார்.
சமீபத்தில் அண்ணாத்த படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு தங்கையாக நடித்திருந்தார். இப்படத்திற்கு பிறகு சாணிக்காகிதம் படத்தில் செல்வராகவனுடன் நடித்திருந்தார். படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் மகேஷ் பாபுவின் சர்காரு வாரி பாட்டா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். படத்தின் டிரைலர் பாடல்கள் மக்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பை கூட்டி வருகிறது.
இன்று இப்படத்தின் MaMaMahesha என்ற பாடல் மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. இதில் கீர்த்தி சுரேஷ் இதுவரை இல்லாத அளவிற்கு ஐட்டம் நடிகை மாதிரி ஆடியிருக்கிறாராம். இதன் பிரமோ வீடியோ தற்போது வெளியாகியதை பார்த்த ரசிகர்கள் கடைசில கீர்த்தியையே ஐட்ட சாங்கிற்கு ஆட வெச்சிட்டீங்களே என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.