இதுவரை பார்க்காத அளவிற்கு இப்படியொரு போட்டோஷூட்! படவாய்ப்பு தான் காரணமா?
சினிமாவில் குறுகிய காலகட்டத்தில் முன்னணி நடிகைகள் என்ற இடத்தை பெருவது சுலபமான விஷயம் கிடையாது. அப்படி 2015ல் இது என்ன மாயம் படத்தின் மூலம் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக நடித்து அறிமுகமாகியவர் நடிகை கீர்த்தி சுரேஷ். வாரிசு நடிகையாக இருந்தாலும் தன் உழைப்பால் வாய்ப்புகளை பெற்று 7 வருடத்தில் இந்த இடத்தினை பெற்று வருகிறார்.
ஆரம்பத்தில் இருந்தே தற்போது வரை க்ளாமர் பக்கம் செல்லாம் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகையாக திகழ்ந்து வந்துள்ளார். மகாநதி படத்திற்காக தேசிய விருது வாங்கியப்பின் மார்க்கெட் அதிகமாகி அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகினார்.
தற்போது கையில் தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிப்படங்களில் நடித்தும் வருகிறார். சமீபத்தில் அண்ணாத்த படத்திற்கு பிறகு கதாநாயகியாக தெலுங்கில் குட்லக் சக்தி, சர்காரு வாரிபாட்டா படங்கள் வெளியாகவுள்ளது.
அதற்காக பல போட்டோஷூட்டினை எடுத்து வெளியிட்டு வருகிறார். இதுவரையில் க்ளாமர் போட்டோஷூட் பக்கமே செல்லாத கீர்த்தி சுரேஷ், அதற்கு அடித்தளம் போட்டு பலவித போஸியில் ஷூட் நடத்து வெளியிட்டு வருகிறார்.
தமிழில் அண்ணாத்த படத்தால் கெடுத்துக்கொண்ட மார்க்கெட்டை பிடிக்கத்தான் இப்படி செய்கிறாரா கீர்த்தி என்று பலர் கலாய்த்து வருகிறார்கள்.