ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை இருந்துச்சு..இதை மட்டும் செஞ்சு உடலை குறைத்தேன்!! கீர்த்தி சுரேஷ்..
கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமானவர். இதை தொடர்ந்து ரஜினி முருகன் படம் இவருக்கு பெரிய ஹிட் கொடுத்து முன்னணி நடிகையானர், பிறகு என்ன விஜய், சூர்யா, விக்ரம் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.
அதோடு அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு தங்கையாகவும் நடித்தார். இவர் தெலுங்கில் நடித்த மகாநடி படத்திற்காக தேசிய விருதெல்லாம் வாங்கினார், இப்படி பீக்-ல் இருக்கும் போதே தன் நண்பரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
இதன் பிறகும் தொடர்ந்து படங்களில் நடிக்கும் இவர், உடல் எடையை எப்படி குறைத்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன், கீர்த்தி க்ராஷ் டயட் அல்லது மாத்திரைகள் இல்லாமல், தீவிரமான கார்டியோ பயிற்சிகள் மூலம் தன்னுடைய உடல் எடையில் 9 கிலோவை குறைத்திருக்கிறார்.
9 கிலோ
அவர் கூறியதில், நான் 2019ல் கொஞ்சம் பருமனாக இருந்தேன். அதன்பின் அதை குறைக்க அதிகமாக கார்டியோ செய்தேன். ஆனால் வலிமைக்கான பயிற்சிகளை நான் மேற்கொள்ளவில்லை. அதனால் தசையை இழந்துவிட்டேன், எடையும் விரைவாக குறைந்தது.
அதற்கான முடிவும் மிகவும் தெளிவாகத்தெரிந்தது. முகம் கூர்மையான வடிவத்துடனும், மெலிந்த தோற்றத்துடனும் இருந்தது. அதேசமயம், என் முகம், அளவுக்கு மீறி ரொம்பவே ஒல்லியானது.
அந்த தோற்றத்துக்கு பின் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை இருந்தது, என்பதையும் கீர்த்தி சுரேஷ் பகிர்ந்துள்ளார். நான் உடற்பயிற்சி மட்டும் தான் செய்யவில்லை, மற்றபடி தூங்குவது, சாப்பிடுவது, வேலை செய்வது என இதையே மீண்டும் மீண்டும் செய்து வந்தேன் என்றும் கீர்த்தி சுரேஷ் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.