13 வருடமாக நடிகை கீர்த்தி சுரேஷை காதலித்தது இவரைத்தான்!! உண்மையை நாசுக்காக உடைத்த தாய்..
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமாகினார். அதன்பின் தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து கொடிக்கட்டி பறந்து வந்தார்.
வதந்திகள்
சமீபகாலமாக நடிகை கீர்த்தி சுரேஷ் இவரை காதலிக்கிறார், அவரை திருமணம் செய்யவுள்ளார் என்ற தேவையில்லாத செய்திகள் பரவி வைரலானது. இடையில் நடிகர் விஜய்யுடன் எடுத்த புகைப்படத்தை கொண்டு பலர் அவருடன் திருமணம் என்றெல்லாம் வதந்திகளை பரப்பினார்கள்.
இதன்பின் பிரபல பத்திரிக்கையாளர் கீர்த்தி சுரேஷின் நெருங்கி நண்பரிடம் விசாரித்த போது கீர்த்தி சுரேஷ் 13 ஆண்டுகளாக பள்ளி நண்பர் ஒருவரை ரகசியமாக காதலித்து வருவதாக தெர்வித்தார். மேலும், அவர் பல ரெசார்ட்களை வைத்திருக்கும் தொழிலதிபர் என்றும் 4 ஆண்டுகளுக்கு பின் திருமணம் செய்ய முடிவெடுத்துவிட்டார்கள் என்றும் கூறியிருந்தார்.
அம்மா மேனகா
இதுகுறித்து கீர்த்தி சுரேஷின் அம்மா மேனகா, அதெல்லாம் பொய் என்றும் வேறு எதுவும் நான் பேசவிரும்பவில்லை என்றும் கூறியிருந்தார். ஆனால், கீர்த்தி சுரேஷின் அம்மா கீர்த்தி சுரேஷ் காதல் குறித்து எதுவும் கூறவில்லையாம். அதுகுறித்து இப்போதைக்கு எதுவும் பேசவிருப்பமில்லை என்று தான் கூறியுள்ளார் என்று வலைப்பேச்சு பிஸ்மி கூறியிருக்கிறார்.