காதலருடன் திருமணம்.. கொண்டாட்டத்திற்கு தயாராகும் கீர்த்தி சுரேஷ்! புகைப்படம் இதோ

Keerthy Suresh Marriage
By Kathick Dec 12, 2024 03:30 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் பேபி ஜான் படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவிலும் அறிமுகமாகியுள்ளார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் தனது 15 வருட காதலர் ஆண்டனியை திருமணம் செய்யவுள்ளார். கோவாவில் இவர்களுடைய திருமணம் இன்று நடைபெறவுள்ளது. இந்த திருமணத்தில் மிக நெருக்கமானவர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்துகொள்ளவுள்ளனர்.

காதலருடன் திருமணம்.. கொண்டாட்டத்திற்கு தயாராகும் கீர்த்தி சுரேஷ்! புகைப்படம் இதோ | Keerthy Suresh Marriage Celebration Starts Photo

காலையில் ஹிந்து முறைப்படி திருமணம் நடக்கும் என்றும், அதனை தொடர்ந்து மாலையில் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடைபெறும் என தகவல் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷின் திருமண கொண்டாட்டம் துவங்கியுள்ளது.

அதற்காக தயாராகி வரும் புகைப்படத்தை கீர்த்தி, தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இதோ நீங்களே பாருங்க..


Gallery