டேய் சும்மா இருடா நானே நொந்துபோய் இருக்க! கீர்த்தி சுரேஷின் மைண்ட் வாய்ஸ்..

Keerthy Suresh Indian Actress
By Jai Jun 12, 2022 09:50 AM GMT
Report

இது என்ன மாயம் படத்தின் மூலம் மலையாள நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் நடிகை கீர்த்தி சுரேஷ். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மலையாள படங்களில் நடித்து வந்த கீர்த்தி ரஜினி முருகன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து நல்ல வர்வேற்பு பெற்று வந்தார்.

அதன்பின் நடித்த தொடரி, ரெமோ, பைரவா, பாம்பு சட்டை, தானா சேர்ந்த கூட்டம், சீமராஜா, சர்கார், பென்குயின், மிஸ் இந்தியா, அண்ணாத்த போன்ற படங்கள் அடுத்தடுத்த தோல்வியை தழுவியது.

இருந்தபோதுலும் தென்னிந்திய சினிமாவில் கவனிக்கப்படும் நடிகையாகவும் கோடியில் சம்பளம் வாங்கும் நடிகையாகவும் திகழ்கிறார். இப்படங்களுக்கு பிறகு சாணி காயிதம், சர்கார் வாரிபாட்டா போன்ற படங்கள் நல்ல வரவேற்பு பெற்றது.

தற்போது நடிகர் டோவினோ தாமஸ் நடித்துள்ள வாஷி என்ற மலையாள படத்தில் வக்கிலாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். வாஷி படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வந்த நிலையில் ஜூன் 17 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கீர்த்தி சுரேஷ் டோவினா தாமஸ் பக்கத்தில் உட்கார்த்து முகப்பாவனையை கொடுத்தை பலர் கிண்டல் செய்யும் வண்ணம் கலாய்த்து வருகிறார்கள். இதற்கு காரணம் டோவினோ தாமஸ் நடித்த படங்களும் சமீபத்தில் தோல்வியை சந்தித்து பிளாப் படங்களை கொடுத்து வருகிறார் என்பதுதானாம்.

டேய் சும்மா இருடா நானே நொந்துபோய் இருக்க! கீர்த்தி சுரேஷின் மைண்ட் வாய்ஸ்.. | Keerthy Suresh Mind Voice About Tovino