விஜய்யிடம் நான் பண்ண பெரிய தப்பு அதை கூட செய்யாமல் விட்டது தான்!! புலம்பி தள்ளிய நடிகை கீர்த்தி சுரேஷ்

Vijay Keerthy Suresh Gossip Today
By Edward May 19, 2023 03:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இப்படத்தினை தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் அடுத்தடுத்து நடித்து வந்தார்.

விஜய்யிடம் நான் பண்ண பெரிய தப்பு அதை கூட செய்யாமல் விட்டது தான்!! புலம்பி தள்ளிய நடிகை கீர்த்தி சுரேஷ் | Keerthy Suresh Missed That One With Vijay Video

முன்னணி நடிகையாகவும் அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகையாகவும் திகழ்ந்து வருகிறார். ஆரம்பத்தில் அடக்கவுடக்கமாக நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் தற்போது கிளாமர் ரூட்டுக்கு மாறியதோடு கிளாமர் போட்டோஷூட்டிலும் இறங்கியுள்ளார்.

இந்நிலையில் சமீபகாலமாக நடிகர் விஜய்யை வைத்து கீர்த்தி சுரேஷ், பல ரூமர் செய்திகளை சந்தித்து வருகிறார். அதேபோல் விஜய்யுடன் எடுத்த புகைப்படங்கள், அவரை பற்றி கீர்த்தி சுரேஷ் பேசிய வீடியோக்கள் என இணையத்தில் வைரலானது. விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ் பல படங்களில் ஜோடியாக நடித்தது தான் அந்த ரூமருக்கு காரணம்.

விஜய்யிடம் நான் பண்ண பெரிய தப்பு அதை கூட செய்யாமல் விட்டது தான்!! புலம்பி தள்ளிய நடிகை கீர்த்தி சுரேஷ் | Keerthy Suresh Missed That One With Vijay Video

தற்போது விஜய்யை பற்றி ஒரு மேடையில் கீர்த்தி சுரேஷ் பேசிய வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. ஆனால் இது பல ஆண்டுகளுக்கு முன் கீர்த்தி சுரேஷுக்கு நடந்த சம்பவம் பற்றி தான் இந்த வீடியோ. போக்கிரி படத்தின் 100 வது நாள் சக்சஸ் சமயத்தில் விஜய், கேரளா பக்கம் வந்தார்.

அப்போது நான் செல்போனில் அவரை மட்டுமே புகைப்படம் எடுத்தேன், நான் பண்ண பெரிய தப்பு அவரை மட்டும் தான் புகைப்படம் எடுத்தது. அப்போது செல்ஃபி எல்லாம் தெரியாது, அவருடன் சேர்ந்து என்னையும் சேர்த்து எடுத்திருந்திருக்கலாம் அது ஒரு பொக்கிஷமாக இருந்திருக்கும் என்று தெரிவித்துள்ளார்.