வேறு மதத்தை சேர்ந்த காதலர்!! நினைத்து பயந்து போன நடிகை கீர்த்தி சுரேஷ்..
கீர்த்தி சுரேஷ்
தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் பக்கமும் கால் பதித்திருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ், பேபி ஜான் படத்தில் முக்கிய ரோலில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இப்படம் ரிலீஸுக்கு முன் தன்னுடைய 15 ஆண்டுகால காதலரை திருமணம் செய்தார்.
திருமணத்திற்கு பின் மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ள கீர்த்தி சுரேஷ், பாலிவுட் போனதும் பாலிவுட் நடிகைகளின் கிளாமர் லுக்கிற்கு சமமான ஆடைகளை அணிந்து அனைவருக்கும் ஷாக் கொடுத்து வருகிறார்.
சமீபத்தில் நடிகர் ஜெகபதி பாபு தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய காதல், திருமணம் குறித்து சில தகவல்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
வேறு மதத்தை சேர்ந்த காதலர்
அதில், நானும் அவரும் (கணவர் ஆண்டனி) 2020ல் இருந்து காதலிக்க ஆரம்பித்தோம், நான் கல்லூரி படிப்பை முடிக்கணும், வேலைக்கு செல்ல வேண்டும், 15 ஆண்டுகளாக காதலித்ததில் 6 ஆண்டுகள் நாங்கள் லாங் டிஸ்டன்ஸ் ரிலேஷன்ஷிப்பில் இருந்தோம்.
ஆண்டனி கத்தாரிலும் நான் சென்னையில் இருந்து கொண்டு 6 ஆண்டுகள் காதலித்தோம். ஆண்டனி நாடு திரும்பியதும், திருமணத்திற்கு தயாராக இல்லை. அந்நேரத்தில் திருமதியாக ரெடியாக விரும்பவில்லை, 4 ஆண்டுகளுக்கு முன் என் அப்பா, ஆண்டனி பற்றி பேசினார்.
ஆண்டனி வேறு மதத்தை சேர்ந்தவர் என்பதால் பல எதிர்ப்புகள் கிளம்பும் என்று பார்த்தால் சம்மதம் சொல்லிவிட்டேன். மேலும், ஆண்டனி எங்கள் வீட்டுக்கு வந்ததும் என் அப்பா ட்ரிங்க்ஸ் ஊற்றிக்கொடுத்தார் என்று கீர்த்தி சுரேஷ் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.