என்னை கல்யாணம் பண்ண அம்மா வீட்டுக்கே போய்ட்டாரு!! கீர்த்தி சுரேஷுக்கே ஷாக் கொடுத்த நபர்..
தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். அதன்பின் தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழியில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து பிரபலமானார்.
தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். மாமன்னன் படம் 29 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் பிரமோஷனுக்காக பேட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், லவ் லட்டர் குறித்து வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். ஒருவரிடம் இருந்து தொடர்ந்து லட்டர் வந்து கொண்டிருந்தது. கல்யாணம் பண்ணனும்னு சொல்லி முகவரியோடு சேர்த்து லட்டர் போட்டார்.
இன்னொருவர், கொஞ்ச நாள்க்கு முன்பு வீடு தேடியே வந்துவிட்டார். அவர் வேறுமாதிரி இருந்தார். நான் அப்போது இல்லாத சமயத்தில் வேலையாட்களிடம், என் கணவராக பாவித்து, ஏன் அவ அப்படி பண்றா, அந்த படம்லாம் பண்றா என்று கூறியுள்ளார்.
கேரளா-ல என் அம்மா வீட்டுக்கே போய், பெண் கேட்டார். மேலும் சென்னை வீட்டில் வந்து, எதுக்கு உதயநிதி கூடலாம் படம் பண்றான்னு கேட்டார். யார்றா நீன்னு கேட்க தோணியதாகவும் அந்த விசயத்தை உதயநிதி கிட்டவே கூறியதாகவும் கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.