அந்த விசயத்துக்காக ஆப்ரேஷன் பண்ணேனா!! முற்றுப்புள்ளி வைத்த நடிகை கீர்த்தி சுரேஷ்..
தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். அதன்பின் தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழியில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து பிரபலமானார்.
தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். மாமன்னன் படம் 29 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் பிரமோஷனுக்காக பேட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் உடல் எடையை குறைத்தது குறித்து பேசியுள்ளார். நான் உடல் எடையை குறைக்க ஒர்க்கவுட் பண்ண ஆரம்பித்ததே, மகாநடி படத்திற்கு பின் தான். அந்த டைமில் தான் 10 கிலோ குறைத்தேன்.
நிறையபேர் கேட்டார்கள் ஆப்ரேஷன் எதன்னா பண்ணியான்னு கேட்டாங்க. அதல்லாம் நான் எதுவும் பண்ணவில்லை, அதன்பின் யோகா, ஜிம் ஒர்க்கவுட் இதெல்லாம் பண்ணும் போது, இன்னும் கொஞ்சம் ஒல்லியாகிவிட்டேன் என்று சிலர் கூறினார்கள். அதன்பின் உடல் எடையை ஏற்றினேன் என்று கீர்த்தி சுரேஷ் பகிர்ந்துள்ளார்.