கோடியில் புறளும் அண்ணாத்த படக்குழு! தங்கச்சிக்காக கோடியில் சம்பளம் வாங்கிய நடிகை கீர்த்தி!

boxoffice keerthysuresh chiranjeevi annaatthe rajinikanth
By Edward Nov 08, 2021 06:00 AM GMT
Report

தமிழ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருந்த நடிகர் சூப்பர் ஸ்டார் நடிப்பில் இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான படம் அண்ணாத்த தீபாவளி அன்று வெளியானது. ரஜினி, நயன் தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பூ உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வெளியானது. சிறுத்தை சிவா என்றாலே குடும்ப அத்யாத்தை முன்னிறுத்தி எடுத்து வருவதால் அதிகவரவேற்பு பெற்று இருந்தனர் ரசிகர்கள்.

ஆனால் படம் நேர்மறை விமர்சனங்களை பெற்றது. அப்படி இருந்தாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று 100 கோடி வசூலை எட்டியது. அண்ணன் தங்கை பாசத்தை மையமாக இருந்ததால் இப்படத்தில் ரஜினிகாந்திற்கு தங்கையாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். இதுவரையில் கதாநாயகியாக நடித்திருந்த கீர்த்தி சுரேஷ் கோடியில் சம்பளம் தொட்டாலும் அண்ணாத்த படத்திற்காக 2 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார்.

தங்கச்சிக்காக இத்தனை கோடி சம்பளமா என்று இளம் நடிகைகள் ஷாக்காகி வருகிறார். மேலும் தெலுங்கில் ரீமேக்காகும் வேதாளம் படத்தில் நடிகர் சிரஞ்சீவிக்கு தங்கச்சியாக நடிக்க கமிட்டாகியுள்ளார். ஹீரோயின் என்பதை மறந்து கீர்த்தி சுரேஷ் பணத்திற்காக முன்னணி நடிகர்களுடன் தங்கச்சி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாரா என்று கேள்விகள் எழுந்து வருகிறது.