நயன்-விக்னேஷ் திருமணத்தை உறுதி செய்த கீர்த்தி சுரேஷ்! மேடையில் இப்படிபோட்டு உடைச்சிட்டியேமா?
தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி அதன்பின் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழியின் சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் ஜோடிப்போட்டு கோடியில் சம்பளம் வாங்கு நடிகை லிஸ்ட்டில் சேர்ந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற தனியார் இணைதள விருது விழாவில் கீர்த்தி சுரேஷ், கிரித்தி செட்டி, ரன்வீர் சிங் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு காதல் ஜோடிகளான நயன் தாரா விக்னேஷ் சிவனும் கைக்கோர்த்த படி கலந்து கொண்டனர்.
மேடையில் கீர்த்தி சுரேஷ் பேசுகையில், உங்களின் திருமணம் ஜூன் 9 ஆம் தேதி தானா? என்று நயன் தாரா விக்னேஷ் சிவனை பார்த்து கேட்டுள்ளார். அவர் விளையாட்டாக கேட்க இருவரும் சிரித்தபடி இருந்தனர்.
இதிலிருந்து நயன் தாரா விக்னேஷ்சிவனை ஜூன் 9ஆம்தேதி திருமண செய்வது உறுதியாகியுள்ளது என்று இணையத்தில் பலர் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
