திருமணமான நடிகருடன் இரண்டு படங்களில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்.. யார் அந்த கொடுத்த வைத்த நடிகர் தெரியுமா
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தற்போது சாணி காயிதம் படம் வெளியாக தயாராகவுள்ளது. இதை தவிர்த்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, வடிவேலு, பகத் பாசில் உள்ளிட்ட பலரும் நடிக்கும் மாமன்னன் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் கீர்த்தி.
மேலும், தெலுங்கில் மகேஷ் பாபு படத்திலும், மலையாளத்தில் டோவினோ தாமஸ் படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் விரைவில் வெளியாகவுள்ளது. ஜெயம் ரவிக்கும் நடிப்பில் ராஜேஷ் இயக்கும் படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் ஒருமுறை ஜெயம் ரவிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குனர் ஆண்டனி இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படத்தில் மீண்டும் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து இரண்டு படங்களில் ஜெயம் ரவி மற்றும் கீர்த்தி சுரேஷ் ஜோடி போட்டு நடிக்கவுள்ளது சில கிசுகிசுவை திரைவட்டாரங்கள் மத்தியில் கிளப்பியுள்ளது.