கல்யாணத்துக்கு பின் சினிமாவுக்கு குட் பாய்? கீர்த்தி சுரேஷ் எடுக்கப்போகும் முடிவு..
கீர்த்தி சுரேஷ்
தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். சில ஆண்டுகளாக கீர்த்தி சுரேஷ் திருமணம் எப்போது என்ற கேள்வி எழுந்து வந்த நிலையில் கடந்த டிசம்பர் 12 ஆம்தேதி 15 ஆண்டுகால காதலர் ஆண்டனி தட்டில் என்பவரை திருமணம் செய்தார் கீர்த்தி சுரேஷ்.
திருமணத்திற்கு விஜய், திரிஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில், கிறிஸ்தவ முறைப்படி மோதிரம் மாற்றி இரண்டாவது முறை திருமணம் செய்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
சினிமாவுக்கு குட் பாய்
திருமணத்திற்கு பின் கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து நடிப்பாரா? என்ற கேள்வி எழுந்த நிலையில் தற்போது அதுகுறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி திருமணத்திற்கு பின் நடிப்பை தொடர்வதில் கீர்த்திக்கு விரும்பமில்லை என்றும், பட தயாரிப்புகள், கணவரின் தொழில்களை கவனித்துக்கொள்ளும் முடிவில் அவர் இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் அதிர்ச்சியாகினாலும் கீர்த்தி சுரேஷ் தரப்பில் எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.