அடுத்தடுத்து குழந்தை பெற்றுக்கொண்ட கீர்த்தி சுரேஷின் ஹீரோக்கள்!! 3வது முறை அப்பாவான சிவகார்த்திகேயன்..

Sivakarthikeyan Keerthy Suresh Actress
By Jai Jun 05, 2024 04:00 PM GMT
Report

தென்னிந்திய சினிமாவி டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷுடன் நடித்த இரு ஹீரோக்கள் அடுத்தடுத்த நாட்களில் குழந்தை பெற்று அப்பாவாகிய விஷயம் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

கீர்த்தி சுரேஷின் ஃபேவரேட் ஹீரோவாக அமைந்தவர்களில் ஒருவரான நடிகர் சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன், ரெமோ போன்ற படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறார். சிவகார்த்திகேயனுக்கு ஜூன் 2 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது.

அடுத்தடுத்து குழந்தை பெற்றுக்கொண்ட கீர்த்தி சுரேஷின் ஹீரோக்கள்!! 3வது முறை அப்பாவான சிவகார்த்திகேயன்.. | Keerthy Suresh Two Heros Blessed Babies Next Days

இதனை சிவகார்த்திகேயன் மகிழ்ச்சியுடன் எக்ஸ் தளப்பக்கத்தில் அறிவித்தார். இந்நிலையில் தற்போது தெறி படத்தின் இந்தி ரீமேக்கில் கீர்த்தி சுரேஷ் வருண் தவானுடன் ஜோடியாக நடித்து வருகிறார்.

தற்போது வருண் தவானுக்கும் பெண் குழந்தை ஜூன் 3 ஆம் தேதி பிறந்திருக்கிறது. கீர்த்தி சுரேஷ் ஜோடிப்போட்டு நடித்த இரு ஹீரோக்களுக்கு அடுத்தடுத்து குழந்தை பிறந்துள்ளதை ரசிகர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.