ஆமாண்டா எனக்கு நாலு முறை கல்யாணமாச்சு! இப்போ என்ன! கடுப்பாகி புலம்பு விஜய்பட நடிகை

vijay anirudh keerthy sathish
By Jon Apr 05, 2021 06:04 PM GMT
Report

சினிமாவில் பல கிசுகிசுக்களுக்கு இடையில் நடிகைகள் மேல் விழும் வதந்திகள் பெரிய அளவில் பேசப்படும் . அதில் இந்த வயசாகிடுச்சு இன்னும் கல்யாணம் பண்ணல என்ற கேள்விதான் அதிகமாக இருக்கும். அப்படி சுமார் 6 ஆண்டுகளுக்கு முன் இளம் நடிகையாக கேரளத்து வரவாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி.

இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகை, கனவுக்கன்னி, தேசிய விருது நடிகை என கொடிக்கட்டி பறந்த நடிகைகளையே தூக்கி எறிந்து அந்த இடத்தை பெற்றார் கீர்த்தி சுரேஷ். சினிமாவில் கேரியரை ஆரம்பித்த கீர்த்தி பல வதந்திகளிலும் கிசுகிசுக்களிலும் சிக்கி வருவார். அப்படி கூட நடிக்கும் நடிகர்களை வைத்து காதல், திருமணமா என்று பரவி அவருக்கே அதிர்ச்சியை கொடுக்கும் செய்தியாக இருக்கும்.

ஏற்கனவே கொரானா வைரஸ் லாக்டவுனால் பட வாய்ப்பு இல்லை என கடுப்பில் இருக்கும் கீர்த்தி சுரேசை மேலும் டென்சனாக்கும் விதமாக அப்படி சமீபத்தில் காமெடி நடிகர் சதீஷுடன் காதல் திருமணம், அனிரூத்துடன் தொடர்பு, தற்போது தொழிலதிபருடன் விரைவில் திருமணம் என்று செய்திகளை பரவி கடுப்பாகினார் கீர்த்தி சுரேஷ். இதனால் டென்ஷனான கீர்த்தி சுரேஷ், ஆமா, எனக்கு ஏற்கனவே நாலு கல்யாணம் ஆயிடுச்சு போதுமா என கடுப்பாகிவிட்டாராம்.

இதுவரை பத்திரிகைகளில் நான்கு முறை கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதை மறுத்தும் அதை பற்றி யோசிக்க தெரிந்த நீங்கள் மற்ற நல்ல விஷயங்களை பரப்புவதில் கவனம் செலுத்துங்கள் என்று கூறியும் உள்ளார். இதுதான் கீர்த்தி சுரேஷின் கோபத்திற்கு காரணம் என்று கோலிவுட் வட்டாரங்களில் கூறப்பட்டு வருகிறது.