யார் என்ன நினைச்சாலும் உன்கூட ஒரு ஆட்டம் போட்டுக்கிட்டே இருப்பேன்!! ரவி மோகன் தோழி கெனிஷா...
பாடகியும் நடிகர் ரவி மோகனின் நெருங்கிய தோழியுமான கெனிஷா தன்னுடைய பிறந்தநாளின் போது எடுத்த புகைப்படங்களை பகிர்ந்ததுடன் ஒரு கேப்டனையும் பகிர்ந்துள்ளார். ரவி மோகன் எடுத்த அந்த புகைப்படங்களை எமோஷனலான பதிவோடு பகிர்ந்துள்ளார்.
ரவி மோகன் தோழி கெனிஷா
அதில், என்னென்றைக்கும் அன்பு இருக்கும், சின்ன வயதில் இருந்தே ப்லா நேரங்களில் நான் ஒரு ஆளாவே மதிக்கப்படவில்லை. என்னை எல்லோரும் ஒதுக்கி வைத்ததுபோல் ஒரு உணர்வு. நான் எதையோ பெருசா எதிர்ப்பார்க்கிறேன் என்று எல்லோரும் தப்பா நினைக்கிறார்கள். ஆனால் நான் எதிர்ப்பார்த்தது எல்லாம் ஒரு சின்ன அன்புக்காகவும் மதிப்புக்காகவும் மட்டும்தான்.

என்றைக்கும் எனக்காக நான் வாழ ஆரம்பிச்சேனோ, அன்றைக்கும் இந்த உலகமே எனக்கு மரியாதை கொடுத்து, ஏகப்பட்ட சந்தோஷங்களை அள்ளிக்கொடுத்தது.
யார் என்ன நினைச்சாலும்
அதன்பின் ரவி மோகன், நீ வந்தப்பின் என் உலகமே மாறிவிட்டது. என்னுடைய எண்ணங்கள், செயல்கள், காதல் பற்றிய என்னுடைய பார்வை எல்லாம் புதிதா இருந்தது. மற்றவர்கள் இதை எப்படி வேண்டுமானாலும் நினைக்கலாம். ஆனால் நம்மை பற்றி தெரிந்தவர்களுக்கு நாம் எவ்வளவு உண்மையா, நிம்மதியா இருக்கிறோம் என்று புரியும், என்னுடைய கஷ்டமான நேரங்களில் எனக்குத்துணையாக நின்று, என்னுடைய ஒவ்வொரு சின்ன வெற்றியைக்கூட உன்னுடைய வெற்றியாக நீ கொண்டாட்டினாய்.

அதுக்காக உனக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது. என்னுடைய இந்த பிறந்த்நாளை இவ்வளவு அழகாக, சுத்தமான அன்பால் மட்டும் நிறைத்ததற்கு ரொம்பவும் நன்றி. நீயே ரொம்ப டயர்டா இருக்கும்போது கூட மற்றவர்களைவிட அதிகமாக எனக்காக ஓடி ஓடி செய்கிறாய். உன்னை பார்த்தாலே எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. கடந்து போனது எத்தனையோ கசப்பான விஷயங்களாக இருக்கலாம்.
ஆனால் அது முடிந்து போச்சு என்று ஒவ்வொரு பிறந்தநாளும் நமக்கு சொல்லும். இனி வரப்போகிற காலம் நமக்கானது. அதை நினைத்து எனக்கு பயமில்லை. அந்த எதிர்காலத்தில் உன்னுடன் சேர்ந்து ரொம்ப சந்தோஷமாக, ஜாலியாக ஒரு ஆட்டம் போட்டுக்கிட்டே இருப்பேன் என்று எமோஷனலான பதிவினை பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்டதில் ரவி மோகன், கெனிஷாவை பூங்கொத்து லொடுத்து பிரபோஸ் செய்யும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.