என்னது கேஜிஎஃப் படம் சூர்யா படத்தின் காப்பியா! வெச்சு செய்யும் நெட்டிசன்கள்..

Suriya Yash K.G.F: Chapter 2
By Edward Apr 28, 2022 12:50 PM GMT
Report

கன்னட சினிமாவின் பிளாக் பஸ்டர் படமாக உருவாகி கொடிக்கணக்கில் வசூல் வேட்டை செய்து வருவது கேஜிஎஃப் 2. நடிகர் யாஷ், ஸ்ரீநிதி செட்டி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் இயக்குனர் பிரசாத் நீல் இயக்கியுள்ளார்.

உலகமெங்கும் தியேட்டர்களில் கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகி மிகப்பெரியளவில் வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படத்தினை பற்றி சமுகவலைத்தளத்தில் பலவிதமான கருத்துக்கள் சென்று கொண்டிருக்கும் நிலையில், சூர்யாவின் அஞ்சான் படத்தின் காப்பி கேஜிஎஃப் படம் என்று கிண்டல் செய்த மீம்ஸ் புகைப்படத்தை வைரலாகி வருகிறது.

கேஜிஎஃப் படத்தில் இருக்கும் கேரக்டர்கள் அப்படியே அஞ்சான் படத்தின் கதாபாத்திரத்தை போல் இருக்கிறது என்றும் கூறி வருகிறார்கள்.

இதனை கேஜிஎஃப் ரசிகர்கள் எந்த படத்தோட எந்த படத்தை ஒப்பிட்டு பேசுவது என்று படுமோசமாக திட்டியும் வருகிறார்கள்.

Gallery