யாஷுக்கு அம்மாவாக நடித்த அர்ச்சனாவா இது? இத்தனை வயது தானா இவங்களுக்கு..

Archana Yash K.G.F: Chapter 2
By Edward Apr 23, 2022 03:35 AM GMT
Report

கன்னட சினிமாவில் பிரம்மாண்டமாக உருவாகி 1000 கோடி வசூலை நோக்கிச்சென்று கொண்டிருக்கு படம் கேஜிஎஃப் 2 படம். பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி யாஷ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்து கொடிக்கட்டி பறந்து வருகிறது.

முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்த இந்த திரைப்படத்தில் யாஷுக்கு அம்மாவாக நடிகை அர்ச்சனா ஜோய்ஸ் நடித்திருந்தார். படத்தில் மற்ற கேரக்டர்களை காட்டிலும் இவர் மிகச் சில காட்சிகளில் மட்டுமே வருவார்.

இந்நிலையில் யாஷ் அம்மாவாக நடித்த அர்ச்சனாவிற்கு வெறும் 27 வயது தான் ஆகிறதாம். 25 வயது இருக்கும் போதே இப்படத்தில் கமிட்டாகி நடித்து கொடுத்துள்ளார். கதக் நாட்டிய கலையை கற்றுக்கொண்ட அர்ச்சனா பல மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.

சீரியல் நடிகையாகவும் ஒருசில சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது அர்ச்சனா மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று ஈர்த்து வருகிறார்.