குஷ்பூவின் கடைசி சிஸ்டாரா? கொள்ளுவிட்ட அரசியல் பிரமுகர்.. கலாய்த்த நெட்டிசன்கள்..
தமிழ் சினிமாவில் 80, 90 களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகள் தற்போது சின்னத்திரையிலும் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்கள். அப்படி முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் நடிகை குஷ்பூ.
இவருக்கு அப்பவே கோவிலை கட்டி கும்பிடும் அளவிற்கு ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர். தற்போது சின்னத்திரை சீரியல்களிலும் குணச்சித்திர ரோல்களிலும் நடித்து வருகிறார்.
பாஜக கட்சியில் முக்கிய பொருப்பில் இருக்கும் குஷ்பூ சமீபத்தில் உடல் எடையை முற்றிலும் குறைத்து இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு மாறியுள்ளார். சமீபத்தில் காரில் செல்ஃபி எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
இதை பார்த்த பிஜேபி கட்சியின் உறுப்பினர் எஸ் ஆர் சேகர், மீண்டும் கோகிலாவா? குஷ்பூவின் கடைசி சிஸ்டரா என்று கருத்தினை கூறியுள்ளார்.
இதற்கு குஷ்பூ ஹாஹாஹா சார் என்ற பதிலை கூறியுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் இதைவிட வேற வேலையில்லையா என்று கலாய்த்து வருகிறார்கள்.
