51 வயதான நடிகை குஷ்பூவா இது? வாய்ப்பிளக்க வைக்கும் போஸில் வெளியிட்ட புகைப்படம்..

Indian Actress Kushboo
1 வாரம் முன்
Edward

Edward

80, 90-களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகள் வாய்ப்பில்லாமல் சினிமாவை விட்டு விலகும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். அப்படி கொடிக்கட்டி பறந்த நடிகையாக இன்னும் தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார் நடிகை குஷ்பூ. முன்னணி நடிகர்கள் ரஜினி, கமலுடன் பல படங்களில் நடித்தும் தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் நடித்தும் பிரபலமானார்.

சொந்த வாழ்க்கை

இயக்குனர் சுந்தர் சி-யை காதலித்து திருமணம் செய்து கொண்ட குஷ்பு அவந்திகா, அனந்திகா என்ற இரு பெண் குழந்தைகளை பெற்றார். 51 வயதாகும் குஷ்பு கணவருடன் இணைந்து படங்களை தயாரித்தும் அரசியல் பணிகளை செய்தும் வருகிறார்.

51 வயதான நடிகை குஷ்பூவா இது? வாய்ப்பிளக்க வைக்கும் போஸில் வெளியிட்ட புகைப்படம்.. | Khushbu Sundar Latest Slim Photoshoot Viral

அடையாளம் தெரியாமல் மாறிய குஷ்பு

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு அவருடன் நடித்திருந்தார். தற்போது நடிகர் விஜய்யின் வாரிசு படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் உடல் எடையை குறைத்து இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வண்ணம் க்ளாமர் ஆடையணிந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார். அவர் வெளியிட்ட சமீபத்திய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் குஷ்புவா இது என்று ஆச்சரியத்துடன் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.