Toxic படம் ஃபிளாப் ஆனதால் மனமுடைந்து போனேன்!! நடிகை கியாரா அத்வானி வருத்தம்..

Kiara Advani Sidharth Malhotra Bollywood Toxic
By Jai Nov 12, 2026 05:45 AM GMT
Report

பாலிவுட்டில் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி வெளியான டாக்ஸிக் பட தோல்வி குறித்து கதாநாயகி கியாரா அத்வானி வருத்தமடைந்ததாக கூறியுள்ளார்.

Toxic படம் ஃபிளாப் ஆனதால் மனமுடைந்து போனேன்!! நடிகை கியாரா அத்வானி வருத்தம்.. | Kiara Advani About The Failure Of Her Film Toxic

Toxic படம்

இயக்குநர் கீது மோகன் தாஸ் இயக்கத்தில் யஷ், கியாரா அத்வானி, நயன் தாரா, ஹூமா குரேஷி, தாரா சுதாரியா, ருக்மிணி வசந்த் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியான படம் தான் டாக்ஸிக்.

ஆகஸ்ட் 26 ஆம் தேதி ரிலீஸான இப்படம் படுமோசமான விமர்சனத்தை பெற்றதோடு, பாக்ஸ் ஆபிஸில் பெரிய அடியை வாங்கியது. 500 கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்யப்பட்டு உருவான டாக்ஸிக் படம், ரிலீஸாகி மொத்தம் வெறும் ரூ. 350 கோடிகள் மட்டுமே வசூலித்து பிளாப்பானது.

Toxic படம் ஃபிளாப் ஆனதால் மனமுடைந்து போனேன்!! நடிகை கியாரா அத்வானி வருத்தம்.. | Kiara Advani About The Failure Of Her Film Toxic

இந்நிலையில் டாக்ஸிக் படம் தோல்வி குறித்து கியாரா அத்வானி தன்னுடைய வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

கியாரா அத்வானி

அதில், டாக்ஸிக் படம் வெற்றி பெறாமல் போனதை நாங்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை. நான் மனமுடைந்து போனேன், ஆனால் வழக்கமான பாணியில் இருந்து வெளியே வந்து, நான் எடுத்த புதிய முயற்சிக்குக் கிடைத்த பாராட்டுகள் ஆறுதலளித்தன.

என் திரைப்பயணத்தில் நதியா ரோல் மிகமுக்கியமானதாக இருக்கும் என்று கியாரா அத்வானி வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.