இயக்குநர் ஷங்கரால் நயன்தாராவை ஓரங்கட்டிய பிரபல நடிகை! சம்பளத்தை கேட்டு வாய்ப்பிளக்கும் தயாரிப்பாளர்கள்..
தென்னிந்திய சினிமாவில் வட இந்திய நடிகைகளின் வருகை அதிகரித்து வருவதை போன்று தமிழில் அறிமுகமாகி நல்ல பேர் எடுத்து வட நாட்டுக்கு சென்றவர்களும் அதிகம். அந்தவரிசையில் இருப்பவர் தான் நடிகை கியாரா அத்வானி. பிரம்மாண்ட இயக்குனராக வலம் இயக்குனர் சங்கர் பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து தமிழ் மற்றும் தெலுங்கில் இயக்கி வரும் படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் பூஜையுடன் தொடங்கியது.
இப்படத்தில் ராம் சரணிற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்கிறார். என்னதான் கியாரா அத்வானி தெலுங்கு படங்களில் நடித்திருந்தாலும் பாலிவுட் படங்களில் பிசியான பின்னர் தெலுங்கு சினிமாவை அவர் கண்டுகொள்ளவே இல்லை. தொடர்ந்து ஹிந்தியில் வெப்தொடர் மற்றும் படங்களில் துணிச்சலான கதாபாத்திரம் என நடித்து வந்த கியாராவை, ராம் சரண் நடிக்கும் படத்திற்காக தமிழ் திரையுலகிற்கு அழைத்து வந்துள்ளார் இயக்குனர் சங்கர்.
ராம் சரண் 15’ படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் மொத்த பட்ஜெட் 200 கோடிவரை ஆகும் என்று திட்டமிட்டு தயாரிப்பாளர் தில் ராஜுவிடம் சொல்லியுள்ளார் ஷங்கர். ஆனால், தயாரிப்பாளர் தில் ராஜு ஷங்கரிடம் பேச்சுவார்த்தை நடத்தி 170 கோடி பட்ஜெட்டுக்குள் படத்தை முடிக்க முடிக்க ஒப்புக்கொள்ள வைத்துள்ளார்.
இந்நிலையில், எப்படியாவது நடித்து நல்ல சம்பளம் வாங்க வேண்டும் என்ற முடிவில் இருக்கும் கியாராவின் சம்பளத்தை கேட்டால் தான் சற்று அதிர்ச்சியாக உள்ளது. அதாவது சங்கர் மற்றும் ராம்சரண் கூட்டணியில் உருவாகும் இப்படத்திற்கு மட்டும் சுமார் 5 கோடி ரூபாய் சம்பளமாக கியாரா அத்வானி பெற உள்ளாராம். இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது. கியாரா அத்வானி பெறும் இந்த சம்பளம் தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாராவைவிட அதிகம் என கூறுகிறார்கள்.
அதிலும் நயன்தாரா தமிழ் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தென்னிந்திய மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆனால் கியாரா அத்வானிக்கு இதுதான் தமிழில் முதல் படமாகும். இருப்பினும் பிரம்மாண்ட இயக்குனர் படம் என்றாலே பட்ஜெட்டும் பிரம்மாண்டமாகவே இருக்கும் எனவே இந்த சம்பளம் எல்லாம் ஒன்றும் பெரிய செலவே இல்லை என ஒரு தரப்பினர் கூறி வருகிறார்கள்.
மேலும் நயன் தாரா தற்போது பாலிவுட்டின் சூப்பர் கிங்காங் அவர்களுடன் அட்லீ இயக்கத்தில் நடித்து வருவதாலும் நயன் தாராவின் மார்க்கெட்டை பெரியளவில் கொண்டு செல்லக்கூடும் என்று கூறப்படுகிறது.