யாருங்க நீங்க புதுசா? காதல் பிரேக்கப் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல நடிகை..

Kiara Advani Sidharth Malhotra Relationship
By Edward Jun 18, 2022 05:30 PM GMT
Report

பாலிவுட்டில் எம் எஸ் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புட்டுடன் ஜோடிப்போட்டு நடித்து பிரபலமானவர் நடிகை கியாரா அத்வானி. இப்படத்தினை அடுத்து கோடியில் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்று வருகிறார்.

சமீபத்தில் சங்கர் - ராம் சரண் கூட்டணியில் பிரம்மாண்ட படத்தில் நடித்து வரும் கியாரா சித்தார்த் மல்ஹோத்ராவுடன் நெருக்கமாக பழகி காதல் கிசுகிசுவில் சிக்கினார். ஷ்ர்ஷா என்ற படத்தில் ஏற்பட்ட காதல், அங்கங்கு ஜோடியாகவும் சுற்றி வந்துள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இதன்பின் நடிகர் வருண் தவணுடன் ஜோடிப்போட்டு Juggjugg Jeeyo நடித்துள்ள படத்தின் வெற்றியை கொண்டாடி வருகிறார்.

இந்நிலையில் தன் காதல் பிரக்கப்பற்றி வதந்தியை கேள்விப்பட்ட கியாரா அத்வானி, இந்த செய்திகளால் இன்னும் நான் விடுபடவில்லை என்றும் இது தனக்கு தனிப்பட்ட வகையில் பாதிப்பு ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.

யார் இந்த மாதிரியான மசாலாவை கிளப்புவிடுவது என்பதை அறிய விரும்புகிறேன். வதந்திகளுக்கு கண்மூடித்தனமாக இருக்க வேண்டும் என்றும் அனைத்தையும் தாங்கும் தோலை வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் காதல் அமைதியாக தான் இருக்கிறது என்று நாசுக்காக கூறியுள்ளார்.