உறவுகளை நான் பார்க்கும் விதத்தை 'டாக்சிக்' மாற்றிவிட்டது.. கியாரா அத்வானி ஓப்பன் டாக்
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கியாரா அத்வானி. இவர் இந்தியில் வெளிவந்த எம்.எஸ். தோனி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.
இந்திய அளவில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கும் இவர், அடுத்ததாக யாஷ் உடன் இணைந்து டாக்சிக் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், டாக்சிக் திரைப்படம் குறித்து சமீபத்திய பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார்.
இதில், "ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையேயான உறவுகளை நான் பார்க்கும் விதத்தை 'டாக்சிக்' திரைப்படம் மாற்றிவிட்டது. இந்த கதை காதலில் இருக்கும் ஒரு விதமான சுதந்திரத்தையும், விடுதலையையும் ஆழமாக ஆராய்கிறது. ஒரு கட்டத்தில், நானும் என் சிந்தனைகளில் இவ்வளவு பற்றற்றவளாகவம், சுதந்திரமாகவும், பயமின்றியும் இருக்க முடியுமா என நினைத்தேன்" என கூறியுள்ளார்.
