மதுபான பாரில் தகராறு!!கடத்தல் வழக்கில் சிக்கி தலைமறைவான நடிகை லட்சுமி மேனன்..
லட்சுமி மேனன்
தமிழில் உருவான கும்கி படத்தில் சிறுவயதிலேயே கதாநாயகியாக அறிமுகமாகி நடித்து பிரபலமானவர் தான் நடிகை லட்சுமி மேனன். இப்படம் கொடுத்த வரவேற்பை அடுத்து அடுத்தடுத்த வாய்ப்புகளை பெற்று நடித்து வந்த லட்சுமி மேனன், இடையில் படவாய்ப்பில்லாமல் காணாமல் போனார்.
தற்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ள லட்சுமி மேனன், ஐடி ஊழியரை கடத்தி சென்று தாக்கிய வழக்கில் சிக்கி தலைமறைவாகியுள்ள சம்பவம் நடந்துள்ளது. கேரளாவின் கொச்சி மதுபான பாரில் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையை அடுத்து, ஒரு தரப்பினர் காரில் ஏறி சென்றுள்ளனர்.
மற்றொரு தரப்பினர் அவர்களை பின் தொடர்ந்து சென்றுள்ளனர். பின் காரில் இருந்தவர்களை கடத்தி சென்று தாக்கியுள்ளனர்.
இதுதொடர்பாக, பாதிக்கப்பட்டவர் புகாரளித்ததன் மூலம், கடத்தி தாக்கிய மிதுன், அனீஸ், சோனா மோள் ஆகியோர் போலிசார் கைது செயதுள்ளனர்.
மேலும் கடத்தல் கும்பலில் காணப்பட்ட எர்ணாகுளத்தை சேர்ந்த நடிகை லட்சுமி மேனன் உள்ளிட்ட சிலர் தலைமறைவாகியுள்ளதாகவும் போலிசார் அவர்களை தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.