கிங் காங் மகள் திருமணம், வாசல்வரை வந்து திரும்ப சென்ற தேவயானி.. இது தெரியாம போச்சே
கிங் காங்
நடிகர் கிங்காங் தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். இவருடைய உண்மையான பெயர் சங்கர். அதிசயப் பிறவி படத்தில் இடம் பெற்ற நடன காட்சி ஒன்றின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள நடிகர் கிங்காங்கின் மகள் கீர்த்தனாவுக்கு சில தினங்களுக்கு முன் திருமணம் நடைபெற்று முடிந்தது.
இதன் காரணமாக சினிமா துறையை சேர்ந்தவர்களுக்கும் அரசியல் வாதிகளுக்கும் வீடு தேடி சென்று திருமண அழைப்பிதழை கிங்காங் வழங்கி வந்தார். அது தொடர்பான புகைப்படங்கள் கூட இணையத்தில் வைரலானது.
இது தெரியாம போச்சே
இந்நிலையில், பேட்டி ஒன்றில் கிங்காங் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
"நான் மொத்தம் 1100 பத்திரிகைகள் அடித்தேன். ஆனால் 10,000 பேர்வரை வந்துவிட்டதாக கேள்விப்பட்டேன். முதலமைச்சர் வருகிறார் என்பதே எனக்கு அன்று மாலை 5 மணிக்குத்தான் தெரியும்.
இதனால், பலர் மண்டப வாசல்வரை வந்து கூட்டம் காரணமாக திரும்ப சென்றுவிட்டதாக கேள்விப்பட்டேன். தேவயானி மேடம் வந்ததாகவும்; ஆனால் கூட்டம் அதிகமாக இருந்ததால் உள்ளே வர முடியாமல் திரும்ப சென்றுவிட்டதாகவும் கேள்விப்பட்டேன்" என்று தெரிவித்துள்ளார்.