பெரிய பிரச்சனையில் சிக்கிவிட்டீர்கள்!! கிருத்திகா உதயநிதி போட்ட போஸ்ட்..
விஜய் - திரிஷா
திரிஷாவும் விஜய்யும் திருமண நிகழ்ச்சிக்கு ஜோடியாக ஒரேமாதிரியான நிறத்தில் ஆடையணிந்து வந்தது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு வழக்கு தொடுத்துள்ள நிலையில் விஜய் - திரிஷா ஜோடியாக வந்தது தற்போது ஹாட் டாப்பிக்காக இருக்கிறது. இதுகுறித்து பல வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் விமர்சித்து வருகிறார்கள்.

கிருத்திகா உதயநிதி
இந்நிலையில், இயக்குநரும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மனைவியுமான கிருத்திகா உதயநிதி ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார். அதில், ஒரு செலிபிரிட்டி என்றால் யார்? அது நீங்கள் யார் என்பதற்கும், மக்கள் உங்களை எப்படி பார்க்கிறார்கள் என்பதற்கும் இடையிலான ஒன்று.

ஒரு கட்டத்தில் நீங்கள் உண்மையில் யார் என்பதை மறந்து, மக்கள் உங்களைப்பற்றி கொண்டுள்ள எண்ணமே நீங்கள் என்று நினைக்கத் தொடங்கினால், நீங்கள் பெரிய பிரச்சனையில் சிக்கிவிட்டீர்கள் என்று தான் அர்த்தம் என்று எக்ஸ்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
கிருத்திகா இப்படி போட்டிருப்பது ஏன் என்ற கேள்வியும் எழுந்து வருகிறது. விஜய்க்கு ஆதராக பேசுறாரா? என்ற கேள்வியும் நெட்டிசன்கள் கேட்டு வருகிறார்கள்.
What is a celebrity?
— kiruthiga udhayanidh (@astrokiru) March 7, 2026
There is You and people's perception of You that makes you a celebrity. Once you start thinking you are people's perception and abandon the You... You are in serious trouble.