பைக்கை கடன்ல வாங்கி யூடியூபர்!! பல லட்சத்தில் ஹைபிரிட் கார் வாங்கிய அசத்தி இருக்காரு..
கேஎல் ப்ரோ பிஜி ரித்விக்
யூடியூப் என்பது தற்போதைய காலக்கட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தப்படும் அன்றாட தேவையாகிவிட்டது. யூடியூப் மூலம் வீடியோக்களை பகிர்ந்து சம்பாதிப்பவர்கள் அதிகம். அப்படி பலரின் வாழ்க்கையை யூடியூப் மாற்றியிருக்கிறது.
அந்தவகையில் யூடியூப்பில் சுமார் 62.9 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் வைத்துக்கொண்டு மிகப்பெரிய இடத்தினை பிடித்தவர்கள் தான் கேஎல் ப்ரோ பிஜி ரித்விக். ஆரம்பத்தில் செல்போன் மூலம் ஆரம்பித்து தற்போது விலையுயர்ந்த சொகுசு கார் வாங்கும் அளவிற்கு வாழ்க்கையை மாற்றியிருக்கிறார் ரித்விக்.
ஹைகிராஸ் கார்
குடும்பத்துடன் சேர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வந்த இவர் அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் பயன்படுத்தும் விலையுயர்ந்த கார் ஒன்றினை வாங்கியிருக்கிறார். ஆரம்பத்தில் பேஷன் ப்ரோ பக்கை கடனில் வாங்கிய இவர் தற்போது காஸ்ட்லியான டொயோட்டா கார் ஒன்றினை வாங்கியிருக்கிறார்.
அதுவும் கிட்டத்தட்ட 17 முதல் 31 லட்சம் மதிப்பில் இருக்கும் ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்ட இன்னோவா ஹைகிராஸ் கார் ஒன்றினை கேஎல் ப்ரோ பிஜி ரித்விக் வாங்கியிருக்கிறார். கார் வாங்கியதை வீடியோவுடன் வெளியிட்டுள்ளார்கள்.