நடிகை ஐஸ்வர்யா ராயின் மொத்த சொத்து மதிப்பு இவ்வளவா?
ஐஸ்வர்யா ராய்
இந்திய சினிமாவில் டாப் நடிகையாக ஜொலித்தவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராய். அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து ஒரு மகளை பெற்றெடுத்து வளர்த்து வருகிறார் ஐஸ்வர்யா ராய்.
இதனையடுத்து சில ஆண்டுகளாக கணவரை விவாகரத்து செய்யப்போகிறார் ஐஸ்வர்யா ராய் என்றெல்லாம் பேச்சுக்கள் எழுந்தது. அதற்கு அபிஷேக் பச்சனும் அதெல்லாம் இல்லை என்பதுபோல் பதிலளித்தார்.

சொத்து மதிப்பு
இந்நிலையில் நடிப்பை தாண்டி தொழிலும் ஈடுபட்டு வரும் ஐஸ்வர்யா ராயின் சொத்து மதிப்பு எவ்வளவு என்பது வெளியாகியுள்ளது. டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் தகவலின்படி நடிகை ஐஸ்வர்யா ராயின் நிகர சொத்து மதிப்பு சுமார் ரூ. 900 கோடியாகும்.
துபாயில் ஒரு ஆடம்பரமான வீடும், மும்பையில் ஒரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பும் உள்ளது. அதன் மதிப்பு சுமார் 21 கோடி ரூபாயாகும். ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட், மெர்சிடிஸ் பென்ஸ், ஆடி போன்ற கார்களை வைத்துள்ளார் ஐஸ்வர்யா ராய்.