கொளத்தூர் தவெக சட்டமன்ற உறுப்பினர் வி. எஸ். பாபு காலமானார்.
கடந்த 2026 சட்டமன்ற தேர்தலின் போது கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்டு வென்ற தவெக கட்சியின் வி. எஸ். பாபு இன்று நவம்பர் 19 ஆம் தேதி மதியம் காலாமானார்.

MLA வி. எஸ். பாபு
2026 சட்டமன்ற தேர்தலின்போது கொளத்தூர் தொகுதியின் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்டு சுமார் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார் வி. எஸ். பாபு. கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி வி. எஸ். பாபுவுக்கு திடீரென மூச்சுத்திணறல் மற்றும் சிவாசக்கோளாறு பிரச்சனை காரணமாக அமைந்தக்கரை எம் ஜி எம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் உடல்நலம் தேறி வருவதாகவும், செப். 22 அன்று மருத்துவ அறிக்கைகள் தெரிவித்தன. அதன்பின் எந்த மருத்துவ அறிக்கையும் வெளியாகவில்லை. தீவிர மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் இம்மாத தொடக்கத்தில் தெரிவித்தார்.

காலமானார்
இந்நிலையில் இன்று மதியம் 2.24 மணியளவில் வி எஸ் பாபுவிற்கு மாரடைப்பு ஏற்பட்டு காலமானதாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மருத்துவமனை அறிக்கைக்கு முன் முதலமைச்சர் விஜய் மருத்துவமனைக்கு செல்வதாக இருந்த நிலையில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முன்னதாக மருத்துவமனைக்கு சென்றிந்தார். வி எஸ் பாபு கிட்டத்தட்ட 70 நாட்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.