லாஸ்லியாவுடன் எந்த காட்சியும் ஒர்க் கவுட் ஆகலையே தர்ஷா? பேசாம அண்ணன் தங்கச்சிவே இருங்களேன்!!

Bigg Boss Losliya Mariyanesan K. S. Ravikumar
By Edward May 07, 2022 01:54 AM GMT
Report

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த தர்ஷன் மற்றும் லாஸ்லியா இணைந்து நடித்துள்ள படம் கூகுள் குட்டப்பா. இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் தயாரித்தும் நடித்தும் சமீபத்தில் வெளியான இப்படம் தியேட்டர்களில் வெளியாகியுள்ளது.

சயின்ஸ் ஃபிக்ஷன் படமாக உருவான இப்படத்தினை பார்த்த ரசிகர்கள் கலவையான விமர்சனத்தையே கூறி வருகிறார்கள். அறிவியல் புனைப்பான படம் இருந்தாலும் எந்தவொரு அறிவியல் கலவையும் இல்லாம எமோஷன் மட்டுமே கலந்திருந்ததாம்.

யோகி பாபு மற்றும் கே எஸ் ரவிக்குமாரின் காட்சிகள் மட்டுமே ஓரளவிற்கு பேசப்படியாக இருந்துள்ளதாக ரசிகர்கள் கூறுகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான தர்ஷன் மற்றும் லாஸ்லியா இப்படத்தில் ஜோடியாக நடித்தும் கெமிஸ்ட்ரி சுத்தமாக ஒர்க்கவுட் ஆகவில்லையாம்.

அண்ணன் தங்கையாக இருந்த இருவரும் இப்படத்தில் நடித்த ரொமான்ஸ் காட்சிகள் எதுக்கு என்பதை போல் இருந்துள்ளது.

அண்ணன் தங்கையாகவே இனிவரும் படங்களில் நடிக்கலாமே என்று கூறும் ரசிகர்கள் போறபோக்கில் லாஸ்லியாவே காணமல் போய்விடுவார் என்று கூறும் அளவிற்கு லாஸ்லியாவின் நடிப்பு எடுபடவில்லை என்று கூறிகிறர்கள் ரசிகர்கள்.