சர்வதேச கைக்கூலியா.. சர்ச்சைக்கு ஆதாரத்துடன் KPY பாலா கொடுத்த பதிலடி!
பாலா
எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தனது சொந்த உழைப்பினால் முன்னேறிய கலைஞர்கள் பலரில் ஒருவர் தான் பாலா.
விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் ஒவ்வொரு மேடையாக தனது தனித்திறமையை காட்டி இப்போது தமிழக மக்கள் கொண்டாடும் பிரபலமாக உள்ளார் KPY பாலா.
இவருக்கு பெரிய ரீச் கொடுத்தது குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சி தான். கோமாளியாக பாலா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அங்கேயும் தனது ரைமிங், டைமிங் காமெடிகள் அடித்து அசத்தினார்.
பலருக்கு நல்லது செய்து வரும் பாலா குறித்து தற்போது சில விமர்சனங்கள் எழுந்துள்ளது. தற்போது இந்த விமர்சனங்கள் குறித்து பாலா வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
சர்வதேச கைக்கூலியா?
அதில், " என்னை சர்வதேச கைக்கூலி என்றெல்லாம் பேசுகிறார்கள். இது அதிர்ச்சி அளிக்கிறது. நான் சாதாரணமான ஆள், நான் வண்டி வாங்கி கொடுக்கிறேன் என்றால், அதை அவர்கள் பெயரில் மாற்றி கொள்வார்கள் அதனால் தான் நம்பரை மறைத்து கொடுக்கிறேன்.
இதுவரை நான் செய்த அனைத்து உதவிகளையும் எனது சொந்தக் காசில், நான் சம்பாதிப்பதைக் கொண்டுதான் செய்து வருகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.