வீடு கட்டிய கையோடு திடீர் ரகசிய திருமணம்!! விஜய் டிவி பிரபலத்தின் மனைவி யார் தெரியுமா
விஜய் டிவி மூலம் பிரபலமானவர்கள் வரிசையில் இருப்பவர் கேபிஒய் தீனா. கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு சின்னத்திரை ரசிகர்களை ஈர்த்தார். அதன்பின் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றும் தொகுத்து வழங்கியும் பிரபலமானார் தீனா.
தனுஷின் பா பாண்டி படத்தில் முக்கிய ரோலில் நடிக்க ஆரம்பித்த தீனா தும்பா, மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார். சொந்தமாக வீடு கட்டிய பின் தான் திருமணம் செய்வேன் என்று கூறியிருந்தார் தீனா.
அதேபோல் சொந்த ஊரில் மூன்றடுக்குமாடி வீட்டினை கட்டி சமீபத்தில் குடும்பத்துடன் குடியேறினார். இந்நிலையில் தீனா பிரகதி என்ற கிராஃபிக்ஸ் டிசைனரை திருமணம் செய்து கொண்டார்.
திடீரென முடிவு செய்யப்பட்ட திருமணத்தில் எடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார் தினா. ஆனால் இது குடும்பத்தினரால் பெண் பார்க்கப்பட்ட நடந்த திருமணம், காதல் திருமணம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார் தீனா.