குழந்தை பிறக்காதுன்னு சாபம்? Kpy நவீன் வாழ்க்கையில் இரு திருமணமா! கண்ணீர் விட்டழுத இரண்டாம் மனைவி..
பிரபல தொலைக்காட்சியில் Kpy நிகழ்ச்சி மூலம் பலர் பிரபலங்களாக சினிமாத்துறையில் கலக்கி கொண்டு வருகிறார்கள். அப்படி பிரபலமானவர் தான் Kpy நவீன். மிமிக்ரி மேடைப்பேச்சு என பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்த நவீன் சமீபத்தில் தன் மனைவி கிருஷ்ணகுமாரியுடன் கர்ப்பமாக இருப்பதை கண்ணீர் மல்க அறிவித்தார்.
மனைவி விஷயம்:-
2016ஆம் ஆண்டு திவ்யலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்ட நவீன் சில மாதங்களாகவே கிருஷ்ணகுமாரி என்பவருடன் நெருக்கமாக இருந்து வந்தார் நவீன்.
இதையடுத்து 2018ல் அவரை திருமணம் செய்ய காத்திருந்த போது முதல் மனைவி கொடுத்த புகாரால் கைது செய்யப்பட்டார். முதல் மனைவி திவ்யலட்சுமி கூறிகையில், எனக்கு நவீனை சிறுவயதில் இருந்தே தெரியும்.
2007ல் நவீனின் தங்கையிடம் டியூசன் சென்று படித்த போது நவீன் எனக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தலில் ஈடுபட்டார். என்னோடு கடைசி வரை நவீன் இருப்பார் என்று பார்த்தேன். ஆனால் என்னை ஏமாற்றி விட்டார் என்று கூறியுள்ளார். இதுகுறித்து நவீன் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
ஜாமினிக்கு பின்:-
இந்த விஷயத்தில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்தும் நவீன் மலேசிய பெண் கிருஷ்ணகுமாரியுடன் தான் வாழ்ந்து வந்தார். இருவருக்கும் திருமணம் நடந்ததா இல்லையா என்று நவீன் இதுவரை சோல்லவே இல்லை.
இப்படியிருக்கையில் நவீன் கிருஷ்ணகுமாரியை திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது. சமீபத்தில் நவீன் குடும்ப புகைப்படங்கள் கூட இணையத்தில் வெளியாகியது. மேலும் சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் கர்ப்பமாக இருக்கும் கிருஷ்ணகுமாரியை வரவழைத்திருந்தார் நவீன்.
அங்கு கிருஷ்ணகுமாரி பேசியபோது, எனக்கு குழந்தை பிறக்காது என்றெல்லாம் பலர் சாபம் விட்டனர். எப்போதும் நவீன் தான் என் வாழ்க்கை என்று கண்ணீர் விட்டபடி அழுத வீடியோ அனைவரையும் கண்கலங்க வைத்தது.