தொகுப்பாளினி பிரியங்கா அனுபவித்த வேதனைகள், அழுது பார்த்திருக்கிறேன்.. பிரபலம் சொன்ன ரகசியம்

Priyanka Deshpande TV Program
By Bhavya May 02, 2025 02:30 AM GMT
Report

பிரியங்கா 

விஜய் டிவியில் தொகுப்பாளினியாக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த சின்னத்திரை பிரபலங்களில் ஒருவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் திருமணம் கடந்த வாரம் திடீரென நடைபெற்று முடிந்தது.

தனது நீண்ட நாள் காதலரான வசி என்பவரை திருமணம் செய்துகொண்டார். பிரியங்கா - வசி திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது.

இந்த திருமணத்தில் அமீர், பாவனி, நிரூப், மதுமிதா, அசார் ஆகிய விஜய் டிவி நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.

தொகுப்பாளினி பிரியங்கா அனுபவித்த வேதனைகள், அழுது பார்த்திருக்கிறேன்.. பிரபலம் சொன்ன ரகசியம் | Kpy Sarath Open Up About Vj Priyanka Life

அனுபவித்த வேதனைகள்

இந்நிலையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமான சரத், பிரியங்கா குறித்தும் அவரது திருமணம் குறித்தும் பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதில், "பிரியங்கா எப்போதும் தன்னை சுற்றி இருப்பவர்களை ஜாலியாகவும் கலகலப்பாகவும் வைத்திருப்பார், அந்த விஷயம் எல்லோருக்கும் தெரிந்தது தான்.

ஆனால் அவர் மிகவும் Sensitive ஆனவர், அவர் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள் அதிகம். பிரியங்கா அழுது பார்த்திருக்கிறேன், அவருடைய வாழ்க்கையில் ஒரு நல்ல விஷயம் நடக்கிறது என அறிந்ததுமே ரொம்பவே நாங்க சந்தோஷப்பட்டோம்" என தெரிவித்துள்ளார்.   

தொகுப்பாளினி பிரியங்கா அனுபவித்த வேதனைகள், அழுது பார்த்திருக்கிறேன்.. பிரபலம் சொன்ன ரகசியம் | Kpy Sarath Open Up About Vj Priyanka Life