நோ சொன்ன ஜான்வி!! பிரதீப்புக்காக 20 வயது விஜய் சேதுபதி ரீல் மகளை தட்டித்தூக்கிய நயன்தாரா கணவர்...
இயக்குனரும் நடிகை நயன் தாராவின் கணவருமான இயக்குனர் விக்னேஷ் சிவன் அஜித் படத்தில் இருந்து விலக்கப்பட்டு வேறொரு படத்தினை இயக்க திட்டமிட்டிருந்தார். அதற்காக லவ் டுடே நடிகரும் கோமாளி பட நடிகருமான பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் ஒரு படத்தினை இயக்கப்போவதாக கூறப்பட்டது.
அப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக யார் நடிப்பார் என தகவலும் வெளியாகியுள்ளது. முதல் நடிகை ஜான்வி கபூரிடம் பேச்சு வார்த்தை நடைபெற்ற நிலையில் தெலுங்கு நடிகையிடம் பேச்சு வார்த்தை நடைபெற்றுள்ளது.
அதன்பின் நடிகை நயன் தாரா பிரதீப்பிற்கு அக்கா ரோலில் நடிக்கவுள்ளார் எற தகவலும் வெளியானது. இந்நிலையில் எல்ஐசி (லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்) என்ற பெயரிடப்பட்ட இப்படத்தின் பூஜை இன்று துவங்கப்பட்டுள்ளது.
7 ஸ்கீர்ன் ஸ்டுடியோ தயாரிப்பில் அனிருத் இசையில், எஸ் ஜே சூர்யா முக்கிய ரோலிலும் நடிக்கவுள்ளாராம். மேலும் பிரதீப்பிற்கு ஜோடியாக விஜய் சேதிபதி நடிப்பில் வெளியான உப்பனா படத்தில் அவருக்கும் மகளாக நடித்த 20 வயதான நடிகை கிருத்தி செட்டி நடிக்கவுள்ளராம். இப்படத்தின் பூஜை நிகழ்ச்சியில் நடிகை கிருத்தி செட்டி கலந்து கொண்டுள்ளார்.