அது தாங்க முடியாத வலியை கொடுத்தது.. க்ரித்தி ஷெட்டி இவ்வளவு கஷ்டங்களை அனுபவித்தாரா?
Tamil Cinema
Krithi Shetty
Actress
By Bhavya
க்ரித்தி ஷெட்டி
நடிகை க்ரித்தி ஷெட்டி தற்போது தமிழில் படங்கள் நடிக்க தொடங்கி இருக்கிறார். அந்த வகையில், பிரதீப் ரங்கநாதன் ஜோடியாக LIK படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.
இந்த படத்தை தொடர்ந்து, க்ரித்தியின் வா வாத்தியார் படம் வரும் 12 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், கீர்த்தி புரமோஷன்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

அனுபவித்தாரா?
இந்நிலையில், சமீபத்திய ஒரு நேர்காணலில், அவர் பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், "நான் மிகச் சிறிய வயதிலேயே அதிக டிரோலிங்கை அனுபவித்தேன். தொடர்ந்து என் படங்கள் வெற்றி பெறாதபோது, நியாயமே இல்லாமல் விமர்சனங்களை சந்தித்தேன்.
நம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட விஷயங்களுக்காக விமர்சனம் வரும்போது அது தாங்க முடியாத வலியை கொடுத்தது" என்று தெரிவித்துள்ளார்.